பொங்கல் ரேஸில் அஜீத்தும், ரஜினியும் மோத இருக்கிறார்கள் என்னும் சூழலில், நேற்று வெளியிடப்பட்ட ‘விஸ்வாசம்’ படத்தின் டீஸர் ரஜினியின் ‘2.0’வை விட அதிக பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது ஷங்கர் மற்றும் ரஜினி வட்டாரங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோள்,ஆலோசனை, எச்சரிக்கை ஆகிய  அத்தனையையும் புறம்தள்ளிவிட்டு பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’ படத்தோடு தனது ‘விஸ்வாசம்’ ரிலீஸாவதில் மிக பிடிவாதமாக இருக்கிறார் அஜீத். அந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த இடத்தில், அல்லது அவருக்கும் மேல் டாப்பில் தான் வந்துவிட்டதை அறிவிக்க நினைக்கிறார் அஜீத்.

அஜீத்தின் அந்த மேலான ஆசைக்கு அச்சாரமாக நேற்று வெளியான அவரது ‘விஸ்வாசம்’ பட டீஸர் ஷங்கர், ரஜினி கூட்டணியின் ‘இந்திர லோகத்து சுந்தரி’ பாடலை இரண்டே மணி நேரத்தில் பின்னுக்குத் தள்ளியது. நேற்று நள்ளிரவில் வெளியான ‘விஸ்வாசம்’ பட டீஸரை யூடுபில் இதுவரை 26 லட்சம் பேர் கண்டுகளித்திருக்கிறார்கள்.

மாறாக ’அவ்வளவு மெகா பட்ஜெட்டுல இவ்வளவு சுமாரான பாடலா? என்று கமெண்ட் அடிக்கப்பட்ட ‘20’வின் ‘இந்திர லோகத்து சுந்தரியே’ பாடல் இன்னும் இருபது லட்சம் பார்வையாளர்களைக் கூட நெருங்கவில்லை.