பொங்கல் தினத்தை முன்னிட்டு, அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும், கடந்த 10 ஆம் தேதி வெளியானது. 

இவ்விரு படங்களுமே பெரிய ஹீரோக்கள்  படம் என்பதால் பாக்ஸ் ஆபிசில் எது முதலிடம் பிடிக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே இருந்து வருகிறது.  மேலும், இரண்டு படங்களுக்குமே விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.

காரணம் அஜித் ஓவர் பில்ட் இல்லாமல், குடும்ப சென்டிமென்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் காரணம். அதோடு கதையில் தேவையான அளவு, காதல், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் தேவையான அளவு கொடுத்திருந்தார் இயக்குனர் சிவா.

இதனால் விஸ்வாசம் படத்திற்கு பி மற்றும் சி சென்டர்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.   படம் ரிலீஸ் ஆன நாளே தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதிலும் தியேட்டர்களுக்கு செல்பவர்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். 

விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. சாதாரண மக்கள் மட்டும் அல்ல பிரபலங்களும் தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். இதுவே இந்த படத்தின் வெற்றியை நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து அஜித் என்ன சொன்னார் என  முதல் முறையாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் சிவா. இது குறித்து அவர் கூறுகையில், இந்த கதையை கேட்கும் போதே இந்த படத்தின் கதை கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும் என  நம்பினேன். இது போன்ற கதையில் நடித்து பல ஆண்டுகள் ஆகிறது கண்டிப்பாக இந்த படம் ஹிட் ஆகும் என அஜித் தெரிவித்ததாக கூறியுள்ளார்.