வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  விஸ்வாசமும், பேட்ட படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால், அதிக திரையரங்கம் கிடைப்பதிலும்,  சிக்கல் இருந்தது ஆனால், முக்கியமான சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர் மொத்தமாக விஸ்வாசம் படமே கைப்பற்றியது.

இந்நிலையில் பேட்ட படத்துக்கு முன்னதாகவே விஸ்வாசம் படத்தை  ஜனவரி 10ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ரிலீஸ் செய்ய அனுமதி கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகே பேட்ட படம் வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கே.ஜே.ஆர், வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டிரைலருக்கே இண்டர்நெட்டை தெறிக்க விட்டோம், அப்போ படத்துக்கு? எதுக்கு வெயிட் பண்ணனும்... சீக்கிரமே வர்றோம்! உலகம் முழுதும் விஸ்வாசம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ். விரைவில் தியேட்டர் லிஸ்ட்... அட்ச்சி தூக்க தயாரா’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.