பேட்ட படத்துடன் மோதிய விஸ்வாசம் விஜயின் சர்கார் படத்துடன் போட்டி போட்டு ரிலீசாகி இருக்க வேண்டியது. சில காரணங்களால் பேட்ட படத்துடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக சத்யஜோதி பிலிம்ஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

அஜித் நடித்த விஸ்வாசம் படம்  பேட்ட படத்தை பின்னுக்குத் தள்ளி வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், "தீபாவளிக்கே விஸ்வாசம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சினிமா ஸ்டிரைக்கால் அது தள்ளிப்போனது. அதனையடுத்து ஆகஸ்ட் மாதமே பொங்கல் ரிலீஸ் என அறிவித்து இருந்தோம். திடீரென சன் பிக்சர்ஸ் பேட்ட பொங்கல் ரிலீஸ் என கூறியது அதிர்ச்சியாக இருந்தது.

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். ஆனால், அவர்கள் பொங்கல் விடுமுறை என்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியாது என கூறி விட்டனர். ரஜினியை வைத்து 6 படம் தயாரித்து விட்டதால் இந்த மோதல் கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருந்தது’’ என்றார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படமும் தீபாவளியன்றே ரிலீசானது. ஒருவேளை சினிமா ஸ்ட்ரைக்ன் இல்லாமல் போயிருந்தால் சர்கார் படத்துடன் விஸ்வாசம் மோதியிருக்கும்.