இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்து பொங்கல் வெளியீடாக வெளியான, 'விஸ்வாசம்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.  

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்து பொங்கல் வெளியீடாக வெளியான, 'விஸ்வாசம்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அஜீத் தன்னுடைய மகளுடன் பேசும் ஒவ்வொரு உணர்வு பூர்வமான வார்த்தைக்கும், மாஸ் வரவேற்பு கிடைத்து வருகிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பார்க்கும் படம் என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும், இதுவரை 125 கோடி வசூலித்துள்ளதாக கூறுகின்றார். மேலும் கர்நாடகா கேரளா மற்றும் உலக நாடுகளிலும் கோடிக்கணக்கில் விசுவாசம் வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் வெளியான தினமே விஸ்வாசம் படத்தை, அனைத்து மொழியிலும் 'விஸ்வாசம்' படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் தெலுங்கில் இரண்டு முன்னணி நடிகர்களின் நேரடி தெலுங்கு படங்கள் வெளியானதால், 'விஸ்வாசம்' ஜனவரி 26ஆம் தேதி அன்று வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிப்ரவரி 1 -ஆம் தேதி தெலுங்கில் விசுவாசம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். 

அஜித்துக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் இல்லை என்றாலும் நயன்தாரா, ஜெகபதிபாபு, ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற போல் ஆக்ஷன், மசாலா, காமெடி, செண்டிமெண்ட், என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளதால் இப்படம் தெலுங்கிலும் வெற்றி பெரும் என நம்பப்படுகிறது.