"விஸ்வாசம்" அஜித் சினிமா பயணத்தில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது.  இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட வசூலை கொடுத்துள்ளது. உலகமெங்கும் வெளியான அனைத்து திரையரங்குகளும் இது தான் எங்கள் திரையரங்கில் அதிக வசூல் என்று டிவீட் போட்டு  வருகின்றனர்.

தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலிருந்து டிவீட் போட்டு கொண்டாடி வருவது, அடிதடி  புகை ,மது ,ஆபாசம் இப்படி தான் இருக்கும் என்று எண்ணிகொண்டிருந்த பெரியவர்கள் தாய்மார்களை அவையெல்லாம் இல்லாமல் தந்தை மகள் பாசத்தில் அனைவரையும் பிரமிக்க வைத்து குடும்ப ஆடியன்ஸை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வர வைத்த படம் விஸ்வாசம். அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது "விஸ்வாசம்" வசூல் வேட்டை. தியேட்டருக்கு குடும்பத்துடன் வந்து பார்க்கிறார்கள் என்ற விஷயம் அவரின் காதுகளுக்கும் சென்றுள்ளதே அதன் காரணம்.

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் வாழ்க்கையில் பின்பற்றும்  விதமாக நல்ல வசனங்களை இயக்குனர் சிவா  பொறுப்பாக படத்தில் வைத்துள்ளது. ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினரையும் சென்றடைந்தது.

இந்நிலையில் படம் வெளியாகி 18 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்களும், படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலும் விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு. மலேசியாவில் பெருமளவில் அஜித்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது நல்ல விசயங்களை சமூகத்திற்காக செய்து வருகிறார்கள். இந்நிலையில் 80 பேர் உணவு வழங்கி "விஸ்வாசம்" படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார்கள்.