தல அஜித், நயன்தாரா நடித்து இயக்குனர் சிவா இயக்கியுள்ள  'விஸ்வாசம்' திரைப்படம்,  இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் இந்த படத்தோடு,  சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் இரண்டு படங்களுக்கும் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதில் குறிப்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பெரிய ஸ்க்ரீன் கொண்ட திரையரங்குகள் எந்த படத்திற்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தை வெளியிடும் சென்னை திரையரங்குகள் குறித்த பட்டியல் தற்போது தெரியவந்துள்ளது. 

அதில் சத்யம், எஸ்கேப், தேவி, ஐநாக்ஸ், ஆல்பர்ட், அபிராபி, சங்கம், பிவிஆர், எஸ்3, கமலா, பிளாஸோ, ஏவிஎம் ராஜேஸ்வரி, உதயம், ஐட்ரீம்ஸ், ஏஜிஎஸ் ஆகிய மல்டிபிளஸ் காம்ப்ளக்ஸ்களில் விஸ்வாசம் திரையிடுவது உறுதியாகியுள்ளது.

மேலும் மாயாஜால் காம்பளக்ஸில் சற்றுமுன் முதல் நாளில் 7 திரையரங்குகளில் 49 காட்சிகளுக்கான முன்பதிவுகள் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.