Asianet News TamilAsianet News Tamil

கன்னட நாட்டையும் கலக்கப் போகும் விஸ்வாசம்….அட்சித் தூக்கும் அஜித் !!

அஜித் நடிப்பில் கடந்த மாதம்  10 ஆம் தேதி திரைக்கு வந்த விஸ்வாசம் திரைப்படம் உலக அளவில் 180 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து அஜித்தின் திரை பயணத்தில் புது உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ‘ஜகமல்லா’ எனும் பெயரில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்,

viswasam in kannada
Author
Bangalore, First Published Feb 6, 2019, 8:54 PM IST

கன்னட திரையுலகினரின் எதிர்ப்பு காரணமாக கன்னடத்தில் பல ஆண்டுகளாக பிற மொழிப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல் நேரடியாகவே வெளியாகி வந்தது. 1960-களின் தொடக்கம் முதல் நடைமுறையில் இருந்து வரும் இந்த வழக்கத்தை கடந்த 2017-ம் ஆண்டு அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் முறியடித்தது. கன்னடத்தில் ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ எனும் பெயரில் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

viswasam in kannada

குறைந்த அளவிலான திரையரங்குகளில் வெளியானாலும் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஆரம்பம், விவேகம் என அஜித்தின் படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகின.

viswasam in kannada

இதில் கடந்த ஆண்டு வெளியான விவேகம், கன்னட படங்களுக்கு இணையாக அங்கு பல திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. அஜித்துக்கென கர்நாடகாவில்  ஒரு மிகப்பெரிய மார்கெட்டையும் இப்படம் உருவாக்கித் தந்தது.

viswasam in kannada

இந்நிலையில் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ‘ஜகமல்லா’ எனும் பெயரில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளில் கன்னட மொழியில் அடுத்தடுத்து படங்களை டப் செய்து வெளியிட்டு வெற்றி கண்ட ஒரே பிறமொழி நடிகர் எனும் சிறப்பை அஜித் பெற்றுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios