‘பிகில்’,‘கைதி’ எல்லாம் நெக்ஸ்ட்டு... இப்போ ‘விஸ்வாசம்’தான் பெஸ்ட்டு...மகிழ்ச்சியின் உச்சத்தில் அஜித் ரசிகர்கள் செய்யும் காரியம்...!

அஜித் - இயக்குநர் சிவா கூட்டணியில் வெளியான 4வது திரைப்படம் ‘விஸ்வாசம்’.சிவாவின் வழக்கமான வி சென்டிமெண்ட் உடன் வெளியான இந்த திரைப்படம், அவரது நம்பிக்கையை பொய்யாக்காமல் மாஸ் ஹிட் அடித்தது. அதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த திரைப்படம், பொங்கல் விடுமுறையின் போது வெளியிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன், தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என பெயரெடுத்த மாஸ் மன்னன் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் நேரடியாக மோதியது. இரண்டு படத்தின் டிரைலர்கள்,  போஸ்டர்கள் என அனைத்தும் சோசியல் மீடியாவில் செம வைரலானது. ‘பேட்ட’ படத்தில் ரஜினி பேசிய வசனத்திற்கு, விஸ்வாசத்தில் அஜித் பதில் சொல்வது போன்று வெளியான டிரைலர்களை ரசிகர்கள் கொண்டாடினர். 

இருப்பினும் குடும்பம் சார்ந்த கதை என்பதால் விஸ்வாசத்தை காண மக்கள் குடும்பம், குடும்பமாக திரையரங்குகளை முற்றுகையிட்டனர். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம், ரிலீஸ் ஆன 50 நாட்களிலேயே தமிழகத்தில் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில்‘விஸ்வாசம்’  முதலிடம் பெற்றது. தமிழகம் மட்டுமல்லாது திரையிடப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ‘பேட்ட’ படத்தை விட அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ்நாட்டில் தொடர்ந்து ‘விஸ்வாசம்’படம் வசூலில் முன்னணியில் இருந்தது. ‘பேட்ட’ படத்தை பின்னுக்கு தள்ளிய நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தின் வாழ்நாள் வசூலை தமிழ்நாட்டில் அடித்து தூக்கியது. இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியாகினர். 

தற்போது ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 300 நாட்கள் ஆகிவிட்டது. அஜித்தின் போட்டோவை கூட சோசியல் மீடியாவில் டிரெண்ட்டாக்கும் அவரது ரசிகர்கள் இதை சும்மாவிடுவார்களா?. ‘விஸ்வாசம்’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை கொண்டாடும் விதமாக #300DOfKWTopperVISWASAM என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதன் மூலம் தங்களது மகிழ்ச்சியை ஷேர் செய்து வருகின்றனர். தற்போது அஜித் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்படும் #300DOfKWTopperVISWASAM ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டான நிலையில், தற்போது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.