விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அட்ச்சிதூக்கு என்ற பாடலை  சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ரிலீசுக்கு தயாராகியிருக்கும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ரிலீஸை உறுதி செய்ததை தவிர எந்த அப்டேட்டும் கிடைக்காததால் தல ரசிகர்கள் செம கடுப்பில் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் முதல்பாடலான ‘அடிச்சுத் தூக்கு’ என்ற பாடலை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் அப்டேட் கொடுத்தது லஹரி மியூசிக் நிறுவனம். அதாவது விஸ்வாசம் படத்தில் வரும் "அட்ச்சி தூக்கு" பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.