பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் தற்போது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது, ரசிகர்களையும் தாண்டி  குடும்பத்துடன் அத்தனை பேரையும் பல முறை பார்க்க தூண்டும் அளவிற்கு அமைந்தது. பல வருடங்களுக்குப் பின் வயதான முதியவர், மூதாட்டிகள் கூட படத்தை காண தியேட்டருக்கு வந்ததை பார்க்க முடிந்தது. இதுவே படத்திற்கு பெரும் வெற்றி தான் என சொல்லப்பட்டது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விஸ்வாசத்திற்கே தமிழகத்தில் நிறைய காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இதனால், எதிர்ப்பார்த்ததை விட சுமார் ரூ 4 லிருந்து 5 கோடி வரை நேற்று மட்டுமே தமிழகத்தில் வசூல் வந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

அந்த வகையில் வசூலிலும் படம் ரூ 150 கோடிகளை கடந்ததாக செய்திகள் வந்தது. தற்போது சோலோவாக ரிலீஸ் அல்லாமல் சூப்பர் ஸ்டார் படத்துடன் களத்தில் இறங்கி பாக்ஸ் ஆஃபிஸ் தமிழ் நாட்டில் நல்ல வசூல் செய்து லைஃப் டைம் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல, பிரபல திரையரங்க நிறுவனமான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ஹைலைட் கிராசர் என்ற சிறப்பை பெற்றிருந்தாக குறிப்பிட்டுள்ளது.