‘விஸ்வாசம்’ படத்தின் பிரிவியூ பார்த்தபிறகு நாம கண்டிப்பா சேர்ந்து படம் பண்ணலாம்’ என்று அஜீத் தெரிவித்ததாக உற்சாகம் காட்டுகிறார் இயக்குநர் சிவா.

‘படத்தில் அஜீத்துக்கு இரண்டு கெட் அப்களா என்று குழம்பவேண்டியதில்லை. ஒரே அஜித் தான். கதையின் ஒரு பகுதி கிராமத்திலும் இன்னொரு பகுதி மும்பையிலும் நடப்பதால் காலமாற்றத்துக்காக இன்னொரு தோற்றத்தில் வருகிறார்.

ட்ரெயிலரில் உள்ள சில வசனங்களைப் பார்த்துவிட்டு படத்தில் அரசியல் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். நான் விஸ்வாசம் கதையை சொல்லி முடித்தபிறகு அஜீத் சார் போட்ட  ஸ்ட்ரிக்ட் ஆர்டர் ஒன்றே ஒன்றுதான். அது படத்தில் தப்பித்தவறிக் கூட அரசியல் வசனம் வரக்கூடாதென்பது. இது மிரட்டலான வில்லேஜ் சப்ஜெக்ட்தான்.

வலைதளங்களில் அஜீத் என்னோடு தொடர்ந்து 4 வது படம் பண்ணியது போரடித்துவிட்டது என்பதுபோல் பரப்புகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர் அடுத்தடுத்து தொடர்ந்து என்னோடு படம் பண்ணவே விரும்புகிறார். நாங்கள் இணையும் ஐந்தாவது படத்தின் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்கிறார் சிவா.