ஆளாளுக்கு வளைத்து வளைத்து மீடியாவில் அஜீத் புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தனைபேர் பேட்டியிலும் முக்கியமான இடம் பிடித்திருப்பது வழக்கம்போல் அஜீத், யூனிட் மக்களுக்கு சமைத்துப்போட்ட பிரியாணிதான்.

‘விஸ்வாச’ தரிசனத்துக்கு இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால், அஜீத், நயன்தாராவைத் தவிர அத்தனை பேரும் மீடியாவின் தொடர்பு எல்லைக்குள் வந்துவிட்டார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குநர் சிவா, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடன இயக்குநர்கள் என்று ஆளாளுக்கு வளைத்து வளைத்து மீடியாவில் அஜீத் புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தனைபேர் பேட்டியிலும் முக்கியமான இடம் பிடித்திருப்பது வழக்கம்போல் அஜீத், யூனிட் மக்களுக்கு சமைத்துப்போட்ட பிரியாணிதான்.

இவர்கள் வழியிலிருந்து சற்றே விலகி ‘விஸ்வாசம்’ பட ட்ரெயிலர் போலவே தன் ஊர், பேர், மனைவி, மக்களை பெருமையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பழனிச்சாமி. சற்றுமுன்னர் முகநூல் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் அஜீத் இடம்பெற்றுள்ள படத்தை வெளியிட்ட வெற்றி...

பேரு -வெற்றி
திருப்பூர் மாவட்டம்
ஊரு -நாதகவுண்டன்பாளையம்
பொண்டாட்டி பேரு- கலை
புள்ளைங்க பேரு
மகிழ் பிரபாகரன்
தீரன் திலீபன்

குடும்பத்தோட குதூகலமா விஸ்வாசம் திருவிழாவ நாளை முதல் வேட்டி கட்டி அடிச்சு தூக்கி அமர்க்களமாக கொண்டாடுவோம். 
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்!!’ என்று பதிவிட்டிருக்கிறார்.