விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் வசூல் சாதனை செய்ய, தமிழகத்தில் ஆல் டைம் அதிக லாபம் கொடுத்த படம் என தியேட்டர் நிறுவனம் வசூல் விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

அஜித் படங்கள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவது விஸ்வாசம் படம் தான்.  குடும்பங்களுக்காகவே எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுக்கிறார்கள். எல்லா இடத்திலும் படம் நல்ல வசூல், லாபம் தான். தமிழ்நாட்டை தாண்டி இலங்கையிலும் வசூல் வேட்டையாடி வருகிறது விஸ்வாசம் .

இலங்கையிலும் வசூல் மற்றும் மக்கள் கூட்டத்தில் "ஆல் டைம் நம்பர் ரெக்கார்ட்" செய்துள்ளதாம். அடுத்தடுத்து அங்கிருக்கும் திரையரங்க உரிமையாளர் அப்டேட் கொடுத்து வருகின்றனர். இப்போது சரஸ்வதி சினிமாஸ் "சரஸ்வதி சினிமாவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடத்தில் விஸ்வாசம் வெற்றி நடைபோடுகின்றது".