Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் ரவுடி பேபி - சிமிட்டான்காரன் பாடல்களை அடிச்சி தூக்கிய அஜித்! புதிய சாதனை!

'மாரி 2 ' படத்தில் இடம்பெற்ற "ரவுடி பேபி", மற்றும் 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற சிமிட்டான்காரன் பாடல்களின் சாதனையை அஜித்தின் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற 'அடிச்சு தூக்கு' பாடல் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. 
 

viswasam adichi thookku song beat rowdy baby and simtankaran song
Author
Chennai, First Published Jan 25, 2019, 6:48 PM IST

'மாரி 2 ' படத்தில் இடம்பெற்ற "ரவுடி பேபி", மற்றும் 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற சிமிட்டான்காரன் பாடல்களின் சாதனையை அஜித்தின் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற 'அடிச்சு தூக்கு' பாடல் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. 

தல அஜித் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம்  விஸ்வாசம். உலகம் முழுவதும் வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டும்  இன்றி, பெண்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பலர் இது குடும்பத்தோடு பார்க்க கூடிய சிறந்த படம் என பாராட்டி வருகிறார்கள்.

viswasam adichi thookku song beat rowdy baby and simtankaran song

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடல்கள் லிரிக்கல் வீடியோ வெளியியிட்டதை அடுத்து அந்த பாடல்கள் வீடியோ ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்பட்டது.

viswasam adichi thookku song beat rowdy baby and simtankaran song

இந்நிலையில், நேற்று முன்தினம் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற  "அடிச்சு தூக்கு" என்ற வீடியோ பாடல் யூ டியூபில் வெளியாகி இருந்தது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது. 

viswasam adichi thookku song beat rowdy baby and simtankaran song

அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் ஏற்கனவே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்ற பாடல்கள் என்ற சாதனைகளை படைத்திருந்த மாரி 2 , படத்தில் ரவுடி பேபி மற்றும்  சர்க்கார் படத்தில் இடம்பெற்ற சிமிட்டான்காரன் பாடல்களின் சாதனையையும் ஒரே நாளில் முறியடித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios