ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்துடன் பொங்கலுக்கு வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படம், குறிப்பாக பி மற்றும் சி செண்டர் பார்வையாளர்கள் அதிகமாகயிருக்கும் தென் மாவட்டங்களில் மிகப்பெரும் வசூலை எட்டியது.

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் அஜித் இணைந்த நான்காவது படம் இது. அப்பா மகள் சென்டிமெண்டில் அமைந்த கதைக்களமானதால் குடும்பத்துடன் திரையரங்கை நோக்கி செல்ல வைத்தது இப்பெறும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வசூலை அள்ளிய விஸ்வாசம் அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூலான படமாகவும் அமைந்தது.
நேற்றுடன் விஸ்வாசம் நூறாவது நாளை நிறைவு செய்ததால் விஸ்வாசம் 100 டேஸ் என அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்கிட்டு ட்ரெண்டிங்காக மாற்றினர்.

படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் அஜித்துக்கும் இந்த வெற்றிக்கு ஆதரவளித்த குடும்ப ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தது.
இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் சிறுத்தை சிவாவும் அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் படத்தின் தயாரிப்பாளர், நயன்தாரா மற்றும் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து, இந்த வெற்றியை சாத்தியமாக்கிய கடவுளுக்கு நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.