இயக்குனர் சிறுத்தை சிவா, இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் திருவிழா அன்று வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இந்த படத்தின் டீஸருக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் டீசர் வெளியாகும் நாள் குறித்து அல்டிமேட் தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷியாகி உள்ளது.

அதாவது, இந்த படத்தின் டீசர் வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும்  இந்த படத்தில் இடம்பெற்றுள்ள  'கண்ணான கண்ணே' என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.