visuvasam movie also going to hit the screen during this festival
அல்டிமேட் ஸ்டார் அஜீத் தொடர்ச்சியாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தான், சமீப காலமாக நடித்து வருகிறார். அப்படி சிவாவின் இயக்கத்தில் அஜீத் நடித்திருந்த, ”விவேகம்” திரைப்படம் பல இடங்களில் நல்ல வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில், அஜீத் நடித்துவரும் திரைப்படம் தான் ”விசுவாசம்”. புதிய கெட்டப்பில் அஜீத் இந்த படத்தில் நடைத்து வருகிறார். மேலும் ”விசுவாசம்” படத்தின் கதை இது தான். என இணையத்தில் கூட சில செய்திகள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு தற்போது தான் விசுவாசம் திரைப்படம் குறித்த, சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை விசுவாசம் படத்திற்கான 40 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று ”மணியார் குடும்பம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் தம்பி ராமையாவின் மகன் நடித்திருக்கிறார். இதனால் இயக்குனர் சிவா இந்த நிகழ்வில் நட்பின் அடிப்படையில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் ”விசுவாசம்” படத்தினை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அஜீத் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும் இந்த திரைப்படத்தில், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.
