நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கை கோர்த்து, தல அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விஸ்வாசம்' . இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனைவர் மத்தியிலும் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எகிறியுள்ளது. 

இதற்கு காரணம் இந்த படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார். தொடர்ந்து தன்னுடைய கெட்டப்பை மாற்றாமல், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து வந்த இவர் இந்த முறை இளமையாக மாறி உள்ளார்.

சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா இளமையாக நடிக்கும் அஜித் கெட்டப்பில் இருக்கும் ஒருகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் வைரலாக பரவியது.

வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதுவரை டீசர் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில் சென்னையின் முன்னணி திரையரங்கு உரிமையாளர் ஒருவரின் டுவிட்டர் பக்கத்தில் நாளை அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து நாளை 'விஸ்வாசம்' டீசர் வெளிவர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றது. இதானால் நாளை என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.