அரசியல்

நடிகர் கமல் மக்கள் நிதி மய்யம் என்ற கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் இவர் அரசியலுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த மாட்டார் என்ற தகவல் வெளி வந்த வண்ணம் இருந்தன.ஆனால் விஸ்வரூபம் 2 படம் மட்டும் வெளிவர தயாராக உள்ளது.இதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் நடிக்கவிருக்கிறார் கமல்.

ட்ரெய்லர்

விஸ்வரூபம் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது.இதே போல் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் வெகு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் உலகநாயகன் டியூப் என்ற இணையத்தில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு ஒரு வெளியாகி உள்ளது

முன்பே ட்ரெய்லர்

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 13 ம் தேதி வெளியாகவுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வரும் நிலையில் இப்படம் ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாகவே கமல் விஸ்வரூபம் 2 ட்ரெய்லரை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.