'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக விஷ்ணு விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. இதனால் அவருடைய கழுத்து, மற்றும் கைகளில் பலமான காயம் ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை எடுத்து வந்த விஷ்ணுவிஷால், மருத்துவர்களின் அறிவுரை படி ஓய்வில் இருந்தார். தற்போது இவருடைய உடல் நலம் முழுமையாக குணம் அடைந்து விட்டதால், மீண்டும் படப்பிடிப்பு, உடல் பயிற்சி என பிஸியாக மாறியுள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய பெண் தோழி ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இருக்கு பெண் வேறு யாரும் இல்லை, பிரபல பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் விளையாட்டு வீராங்கனை ஜவாலா குட்டா.  

டோலிவுட் திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். எனவே விஷ்ணு விஷால் இவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதும் இதை பார்த்து நெட்டிசன்கள் சிலர், ஜவாலா குட்டா, நீங்கள் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறாரா என சிலர் பாசிட்டிவான கேள்விகளை எழுப்பி வந்தாலும், சிலர் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.