vishnu vishal removed in gowtham menon movie

இயக்குனர் கெளதம் மேனன் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தற்போதைய நடிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம் அவர் இயக்கம் மற்ற இயக்குனர்களை ஒப்போடும் போது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இப்போது கெளதம் மேனன் துருவ நட்சத்திரம், என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து 'பொன் ஒன்று கண்டேன்' என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இப்படத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன .

இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பெல்லி சோப்புலு' படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக இந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதற்கு காரணம் தேதி பிரச்சனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஷ்ணு விஷால், சிலுக்குவார்பட்டி சிங்கம், சில்ரல்லா, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…