வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை என தரமான படங்களை தேர்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது, தயாரிப்பாளர்கவும் சாதித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது விஷ்ணு தன்னுடைய குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.எங்களுடைய வாழ்க்கையில் அதிகபட்ச சந்தோஷத்தை கொடுத்த இந்த தருணத்திற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்று விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். 

 விஷ்ணு-ரஜினி தம்பதிக்கு கார்த்தி, மஞ்சிமாமோகன்,வருண்மணியன், ஹரீஷ் உத்தமன், கருணாகரன், சாந்தனு, உள்பட பலர் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாகவும் வாழ்த்துக்கள்.