வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால், 2009ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விஷ்ணுவிற்கு சிறந்த ஓப்பனிங்காக அமைந்தது. அதன் பின்னர் பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு, கிரிக்கெட் வீராராகவே நடித்த ஜீவா படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாது, வசூல் ரீதியாவும் பட்டையைக் கிளப்பியது. 


கடைசியாக விஷ்ணு விஷால் நடித்த திரில்லர் படமான ராட்சசன் வசூலில் அதிரடி காட்டியதோடு, பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது. பிரபல நடிகரான விஷ்ணு விஷால், 2011ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் என ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர். ஓராண்டாக பிரிந்திருந்த இருவரும் சட்டப்படி டைவர்ஸ் பெற்றதாக விஷ்ணு விஷாலே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

மனைவியை விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நட்புடன் இருந்தது தான் விவாகரத்திற்கு காரணம் என்றும் , ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் நெருக்கமாக நடித்தது தான் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

இதை இரண்டையும் மறுத்துள்ள விஷ்ணு விஷால், தேவையில்லாத பொய்களை நிரூபிப்பதற்காக நான்  எனது மனைவியை பிரிந்த காரணத்தை வெளியில் கூறமுடியாது. அது  என்னுடைய தனிப்பட்ட விஷயம், அதைப்பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டதை பகிர்ந்து கொள்ள எனக்கு ஆள் தேவை. என் மனைவியை பிரிந்த பிறகு ஜூவாலா கட்டாவை சந்தித்தேன். அவரும் கணவரை பிரிந்து வாழ்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. இந்த உறவு தற்போது நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: வெறியாட்டம் ஆடும் கொரோனா... மகனை நினைத்து பரிதவிக்கும் தளபதி விஜய்...!

மேலும் பார்த்ததும் காதலிக்கும் 18 வயது இளைஞன் மனநிலை எனக்கு இல்லை. அந்த கட்டத்தை எல்லாம் கடந்துவிட்டேன். இப்போது எனக்கு 35 வயது ஆகிறது. சிந்தனைகள் அனைத்தும் முதிர்ச்சியடைந்துவிட்டன. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.