வரும் டிசம்பர் 21 ரிலீஸ் ஆகும்  படங்களை  தயாரிப்பாளர் சங்கம் ஆர்டராக வைத்திருந்தது.  தயாரிப்பாளர்கள் சங்கத்தின்  கட்டுப்பாட்டை  தூக்கிப்போட்டு மிதித்தார் தனுஷ். ஆமாம் தனது மாரி - 2 பெரிய அளப்பறையை ஏற்படுத்தியது. தனுஷுக்கு பணிந்த தட்டிக் கேட்கமுடியாமல் திணறிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ‘டிசம்பர் 15, 21 அன்று யார் வேண்டுமானாலும் படங்களை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என அறிவிக்க வேண்டிய இயலாமை ஏற்பட்டது. 

இதனால் பயங்கர அப்சட் ஆன  விஷ்ணு விஷால் ‘தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் நுழைந்துவிட்டது இதற்கு தலைவர் விஷால் காரணமல்லை’,  தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை, சிஸ்டம் கெட்டுப் போச்சு என சொல்பவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களால் தயாரிப்பாளர்கள் சங்க  ஒழுங்கு முறையில் சிஸ்டம் குளறுபடியானது. இந்த குளறுபடி ஏற்படக் காரணமாக இருந்தது ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்துள்ள மாரி - 2. ரிலீஸ். தயாரிப்பாளர்  சங்கத்தை மதிக்காமல் அறிவித்தது. இதனால், விஷ்ணு விஷால்  நடித்துள்ள "சிலுக்குவார்பட்டி சிங்கம் " படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் தடுமாறியதே அவரின் கடுமையான விமர்சனத்திற்கு காரணம்.

மாரி - 2, அடங்க மறு, சீதக்காதி, கனா படங்களுக்கு அடுத்ததாக தியேட்டர் ஒதுக்கீட்டில் சிலுக்குவார்பட்டி சிங்கம் தள்ளப்பட்டது. நெருக்கடியை சமாளிக்க படத்தை ரிலீஸ் செய்யும் பொறுப்பை வேறு வழியின்றி உதயநிதியின் ரெட்ஜியண்ட் நிறுவனத்திடம் விஷ்ணு விஷால் ஒப்படைத்திருக்கிறார்.  விஷ்ணு விஷால் செய்த இந்த வேலையால்   திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெட் ஜியண்ட் நிறுவனத்திற்கு என்று தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட திரையரங்குகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் டிசம்பர் 21 ரிலீஸ் படங்களில் வசூல் முக்கியத்துவமிக்க படங்களைத் திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன் பேட்ட படத்தின் ஏழு ஏரியா உரிமையை ரெட்ஜியண்ட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

விஸ்வாசம் படத்திற்கு மதுரை, சேலம் ஏரியாவில் உள்ள 70% தியேட்டர்களை அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒப்பந்தம் செய்து முடித்துவிட்டனர். இதே நிலை மற்ற ஏரியாக்களில் ஏற்பட்டுவிடக் கூடாது; அதற்கு பலம் பொருந்திய விநியோக தொடர்பு, தியேட்டர் தொடர்புள்ள குடும்ப உறவு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தது சன் பிக்சர்ஸ். அதனால் தான் கோவை தவிர்த்து அனைத்து விநியோகப் பகுதியிலும் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியது.

இந்நிலையில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் கோவை விநியோகஸ்தர் கந்தசாமி ஆர்ட்ஸ் தான், பேட்ட படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கு தியேட்டர் கொடுப்பவர்களுக்கே பொங்கலுக்கு "பேட்ட" படம் எனக் கூறி தியேட்டர்களுக்கு நெருக்கடியை கொடுக்கத் தொடங்கிவிட்டது ரெட் ஜியண்ட் நிறுவனம். இதனால் மாரி - 2 வெளியிடும் தியேட்டர்கள் விழி பிதுங்கி இருக்கிறது. அதுமட்டுமல்ல கனா, சீதக்காதி, அடங்க மறு படங்களால் தியேட்டர் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் தனுஷின் புண்ணியத்தால் அதிக தியேட்டரில் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. சங்கத்தின் சட்ட திட்டங்களை மதிக்காமல் ஆணவத்தில் ஆடிவந்த தனுஷின் மாரியை  மாமனார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தை வைத்தே  மர்கயா செய்துள்ளார் விஷ்ணு விஷால்.