Vishal wraps with Vijay for third time

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு மலையாளத்திலும் ரசிகர்கள் பட்டாளம் உணடு.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வரும் மெர்சல் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

அதன்படி தீபாவளிக்கு வரும் மெர்சல், கேரளாவிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் “வில்லன்” படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஷால். ஹீரோவாக மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஹன்சிகாவும் மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது கொசுறு தகவல்.

இந்தப் படத்தின் மூலம், 3-வது முறையாக விஜய்யுடன், விஷால் நேரடியாக மோதுகின்றார். இதற்கு முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் “போக்கிரி” படமும், விஷாலின் “தாமிரபரணி” படமும் மோதியது.

இதனையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு தீபாவளிக்கு “கத்தி” படத்துடன் “பூஜை” மோதியது.

தற்போது விஜய்யின் “மெர்சல்”, விஷாலின் “வில்லன்” படம் மோதுகிறது.