’அதுங்க ரெண்டும் ஆபத்தானது, அதுங்க நம்மள நோக்கித்தான் வரப்போகுது. எல்லாரும் கண்ண மூடிக்கிட்டு, தலைகுப்புறப் படுத்துக்குங்க.’   அந்த செய்திக்கும் இப்படித்தான் ஏக ரகளையாக ரியாக்ஷன்களை சமூக வலைதளங்களில் கொட்டி கதறவிட்டு வருகிறார்கள் வால்பசங்க.

அப்படியென்ன செய்தி அது?...டி.ஆர்.ரும் பேரரசுவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதுதான். 
தமிழ் சினிமாவின் தரத்தை தகரடப்பாவாக்கிய இயக்குநர்களில் மிக முக்கியமானவர் பேரரசு.

கிராமத்தை மறந்து வேறு லெவலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை மீண்டும் வில்லேஜ்  ப்ளஸ் சிட்டி ஆக்ஷன் காம்போ பக்கம் திரும்ப வைத்த அவரது முதல் படமான திருப்பாச்சி மட்டுமே புதுமை.

ஆனால் அதன் பிறகு ஆரம்பித்த சிவகாசியில் லேசாக வழுக்க ஆரம்பித்தவர் பிறகு கொடுத்த திருப்பதி, தருமபுரி, திருத்தணி உள்ளிட்ட அத்தனையும் அச்சுபிச்சு செண்டிமெண்ட், மரண மொக்கையான மாஸ் சீன்கள், கண்ணம்மாபேட்டை டான்ஸ் அளவுக்கு தர லோக்கல் குத்துப்பாடல்கள், தனது நிலைய கலைஞர்களை வைத்து அவர் கொடுக்கும்  காமெடி டார்ச்சர்கள் என்று தலையிலடிக்க வைத்த மெக பிளாப்புகள். 
கெளதம் வாசுதேவ் மேனனே டென்ஷனாகி தெறிக்குமளவுக்கு சினிமாவை துண்டுதுண்டாக வெட்டி மீன் மசாலாவை கொட்டி ஆந்திரா கோங்ரா பிரியாணி பண்ணிய பேரர சில வருஷங்களாக ஃபீல்டு அவுட்டாகி கிடந்தார். தமிழ் சினிமாவும் கொஞ்சம் இளைப்பாறியது. இந்நிலையில் விஷாலை வைத்து புதுப்படம் ஒன்றை துவக்குகிறார் பேரரசு. 
தொடர் தோல்வி தந்த பாடத்தால் ஏதோ இப்போதான் கொஞ்ச நாட்களாக பஞ்ச் டயலாக்கையும், படம் முழுக்க வில்லன்களை அடித்து அடித்தே ரசிகனையும் சாவடிப்பதையும் மறந்து கிடந்தார் விஷால். அவரை மீண்டும் மரண மாஸுக்கு இழுக்கப்போகிறார் பேரரசு. இந்த பகீர் கூட்டணியில் டி.ஆர்.ரும் இணையப்போகிறாராம். 
தாங்குமாய்யா தமிழ் சினிமா?...
இந்த செய்தியை பார்த்துவிட்டுதான் இந்த செய்தியின் முதல் லைனை இணையத்தில் எழுதி தெறித்திருக்கிறார்கள் ரசிகர்கள். 
அதுங்க கெளம்ப ஆரம்பிச்சிடுச்சா?!.....