ஆர்.கே. நகர் தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளால் அடைந்த அவமானத்தை இன்னும் முழுசும் மறக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் விஷாலை, திருவாரூர் தேர்தலில் நிற்கும்படி அவரது ஆதரவாளர்கள் தூண்டி வருவதாக சில திடுக் செய்திகள் நடமாடத்துவங்கியுள்ளன.

ஏற்கனவே நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் இரு பெரும் பதவிகளில் இருக்கும் விஷால் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னிச்சையான முடிவுகள் எடுத்தல், நிர்வாகம், ஊழல், எந்த ஒரு காரியத்திலும் முடிவு எடுக்கமுடியாமல் தவிப்பது என்று சின்னாபின்னப்பட்டு வருகிறார் விஷால்.

இந்நிலையில் திருவாரூர் தேர்தலில் அவரை நிறுத்தி தேரைத் தெருவில் நிறுத்திவிட வேண்டும் என்று அவரது நண்பர்களில் சிலர் நயவஞ்சகமாக நினைப்பதாகத் தெரிகிறது. இதை ஒட்டி, கமல் இன்னும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை அறிவிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் நம்மைத்தான் ஆதரித்தார். அவரு ஆதரவு கொடுத்தா ஜெயிக்கவே செய்யலாம்’ என்று விஷாலுக்கு சிலர் வெறியேற்ற, அதை நம்பி கமலிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கிறாராம் விஷால்.

என்னடா இது திருவாரூர் தேர்தலுக்கு வந்த கஷ்டகாலம். விஷாலுக்கு ஆதரவு தர்றதுக்குப் பதிலா மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல் கலைச்சுட்டுப்போயிடலாம் என்று கமெண்ட் வருகிறது செய்திகள் கசிந்த அதே இடத்திலிருந்து.