‘கொடுத்த சம்பளத்தை ரிலீஸ் பஞ்சாயத்தின்போது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லி பிடுங்கிவிடுகிறார்கள் என்பதால் இனி ஒன்லி சொந்தப் படங்கள் மட்டுமே என்கிற விபரீத முடிவு எடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

சமீப சில வருடங்களாகவே தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் மட்டுமே படங்கள் நடித்து வந்தால் கடைசியாக வெளியான ‘அயோக்யா’ படத்தை பி.மது என்பவரின் தயாரிப்பில் நடித்திருந்தார். நடுவில் சுந்தர்.சி.படம் ஒன்றுக்கு கால்ஷீட் கொடுத்தது,விஷாலின் நிச்சயதார்த்தம், பஞ்சாயத்துகளுக்குப் போனது என்கிற வகையில் படம் மிகவும் தாமதமானதால் கடைசி நேரத்தில் செக் வைத்த தயாரிப்பாளர் விஷாலை ரூ3 கோடிவரை தண்டம் கட்டவைத்தே படத்தை ரிலீஸ் செய்தார்.

இது போன்ற அனுபவங்கள் தனக்கு அடிக்கடி நடப்பதால் இனி, ரிடையராகும் காலம் வரை வெளித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று சர்வ நரம்புகள் துடிக்க தனக்குத் தானே சத்தியம் செய்துகொண்டிருக்கிறாராம் விஷால்.இந்திய அள்வில் மட்டுமல்ல உலகலெவலில் கூட இப்படி ஒரு முடிவெடுத்திருப்பதாக தகவல் இல்லை.