Asianet News TamilAsianet News Tamil

பூட்டு கேட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விஷால் அணியினர்...

விஷால் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது ஆதரவு தயாரிப்பாளர்கள் இன்று காலை 9 மணி முதலே சென்னை தி.நகரிலுள்ள பாண்டி பஜார் காவல் நிலையத்தை முற்றுகையிட ஆரம்பித்தனர். பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நேற்று எதிராளிகளால் ஒப்படைக்கப்பட்ட பூட்டை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

vishal team at pondy bazaar police station
Author
Chennai, First Published Dec 20, 2018, 9:58 AM IST


விஷால் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது ஆதரவு தயாரிப்பாளர்கள் இன்று காலை 9 மணி முதலே சென்னை தி.நகரிலுள்ள பாண்டி பஜார் காவல் நிலையத்தை முற்றுகையிட ஆரம்பித்தனர். பாண்டிபஜார் காவல் நிலையத்தில் நேற்று எதிராளிகளால் ஒப்படைக்கப்பட்ட பூட்டை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.vishal team at pondy bazaar police station

நேற்று நடந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் மாலைவரை தலைமறைவாக இருந்த விஷால் இரவே வெளியே தலைகாட்டினார். பின்னர் ‘தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு தொடர்ந்து பிர்ச்சனை செய்துவந்தவர்கள்தான். அவர்களைப் பொருட்படுத்தப்போவதில்லை. சிறு தயாரிப்பாளர்கள் மேல் எந்த அக்கறையும் இல்லாதவர்கள் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குத் தெரியும்’ என்ற அவர் தனது ஆதரவாளர்களுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு மிக சுருக்கமாகப் பேட்டி அளித்த அவர், vishal team at pondy bazaar police station

‘எனக்கு எதிராகப் போராடுபவர்களின் நோக்கம் கீழ்த்தரமானது. சங்கம் தொடர்பான கணக்கு வழக்குகள் விரைவில் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். இப்போது அவர்கள் போராடுவதற்குக் காரணம் இசைஞானி இளையராஜாவை வைத்து சங்கம் எடுக்கவிருக்கும் விழாவை தடுக்க நினைப்பதுதான். அப்படி விழா நடந்து 10 கோடி ரூபாய் வசூலானால் அது சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்கே பயன்படுத்தப்படும். அப்படி ஒரு நல்ல காரியம் நடந்துவிடாமல் தடுக்கவே இவர்கள் சதி செய்கிறார்கள்.

ஆனால் அவர்கள் நோக்கம் நிறைவேறாது. இளையராஜா இசைநிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று எனக்குத் தெரியும்’ என்று சவால் விட்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios