Asianet News TamilAsianet News Tamil

’96 படத் தயாரிப்பாளருக்கு நடிகர் சங்கம் ரெட்... பழைய அவமானத்துக்கு பழி தீர்த்த விஷால்

‘96 பட ரிலீஸ் சமயத்தில் விஜய் சேதுபதியை பணம் விட்டுக்கொடுக்கும் தியாகியாகவும், தன்னை வட்டிபோட்டுக் கொடுமைப்படுத்தும் வில்லனாகவும் சித்தரித்த தயாரிப்பாளரை நடிகர் சங்கத்தில் ரெட் கார்ட் போட்டுப் பழிவாங்கினார் விஷால்.

vishal takes revenge on '96 film producer
Author
Chennai, First Published Nov 10, 2018, 3:11 PM IST

'96 பட ரிலீஸ் சமயத்தில் விஜய் சேதுபதியை பணம் விட்டுக்கொடுக்கும் தியாகியாகவும், தன்னை வட்டிபோட்டுக் கொடுமைப்படுத்தும் வில்லனாகவும் சித்தரித்த தயாரிப்பாளரை நடிகர் சங்கத்தில் ரெட் கார்ட் போட்டுப் பழிவாங்கினார் விஷால்.

ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட், விக்ரம் பிரபு நடித்த ’வீர சிவாஜி’, விஷால் நடித்த ’கத்தி சண்டை’, ’துப்பறிவாளன்’, விஜய் சேதுபதி நடித்த 96 உட்பட பல படங்களை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தவர் நந்தகோபால். இந்நிறுவனம் படத்தில் நடித்த ஹீரோக் களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாகவும் அதனால் இந்நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்றும் நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாகநடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவன தயாரிப்பான ’துப்பறிவாளன்’ படத்தில் சங்க உறுப்பினர் விஷால் நடித்ததற்காகவும், ’வீரசிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபு நடித்ததற்காகவும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது.  ’96 படத்தில் நடித்த சங்க உறுப்பினர் விஜய்சேதுபதிக்கும் ஊதிய பாக்கி வைக்கப்பட்டுள்ளது.vishal takes revenge on '96 film producer

மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, இந்த தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டு வருகிறது.

படம் வெளியீட்டின் போது, இக்கட்டான சூழ்நிலையில் நடிகர்கள் தங்கள் ஊதியத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்த நற்செயலை பலவீனமாக எடுத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்கள், நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் இருந்தே நடிகர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர, சங்கத்தி ன்நிர்வாகக் குழு கலந்து ஆலோசித்தது. அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த தயாரிப்பு நிறுவனத் துக்கும்/ தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் (நடிகர்கள்/நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.vishal takes revenge on '96 film producer

அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் என்டர்பிரைசஸ்நிறுவனம் சம்பந்தமான எந்த நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் என நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.vishal takes revenge on '96 film producer

ஆனால் இது விஷாலின் சுயநலமான பழிவாங்கும் நடவடிக்கை என்கிறது தயாரிப்பாளர் தரப்பு. ‘96 பட ரிலீஸ் சமயத்தில் தனது ‘துப்பறிவாளன்’ சம்பள பாக்கிக்காக வட்டியும் முதலும் கேட்டுப் படத்துக்கு குறுக்கே நின்றார் விஷால். அதை தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து சரி செய்தார் விஜய் சேதுபதி.  இப்போது தங்கள் நிறுவனம் அதே ‘96 டீமுடன் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து படம் துவங்க இருக்கும் நிலையில் விஷால் நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருப்பதால் இப்படி விஷம் கக்குகிறார் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios