சமீபத்தில் ரெமோ வெற்றியை கொண்டாடும் விதமாக நடை பெற்ற விழாவில் கலந்து கொண்ட சிவர்த்திகேயன், பேசும் போது தான் படத்தை வெளியிட தடுத்த பிரபல தயாரிப்பாளரை தாக்கி பேசினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது நானும் உங்களை போல் தான் கஷ்ட பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றும், ஆகையால் நான் வாங்கும் சம்பளத்திற்கு தயவு செய்து என்னை வேலை செய்ய விடுங்கள் என மேடைலேயே அழ தொடங்கினார்.

ஒரு பிரபலம் அழுவதை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நடிகர் சங்க செயலாளர் விஷால் களம் இறங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, நடிகர் விஷால் தானும் இது போன்ற சம்பவங்களால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக உடனடியாக வளர்த்து வரும் நடிகர்களுக்கு தொந்தரவு கொடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்துள்ளார் விஷால்.