ஒருபக்கம் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்டு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு புறமோ... புது புதுப்படங்களை உடனடியாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் தமிழ் ராக்கர்ஸ்ஸில் நடிகர் விஷாலும் பார்ட்னராக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தகவலை இயக்குநர் ஏ.எல்.விஜயின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தெரிவித்தார்.

பதவிக்கு  வந்தவுடம் முதலில் தமிழ் ராக்கர்ஸை நசுக்குவோம் என்று சொல்லித்தான் விஷால் பதவிக்கே வந்தார். ஆனால் அதுதொடர்பான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாததோடு, அவர்கள் தொடர்பாக தொடர்ந்து மவுனம் காத்துவருகிறார் விஷால். இன்னும் சொல்லப்போனால் விஷால் பதவிக்கு வந்த பிறகு தம்ழ்ராக்கர்ஸின் அட்டகாசம் இன்னும் அதிகரித்திருக்கிறது.

முன்பு படங்களை மட்டும் திருட்டுத்தனமாக வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், வரவர படங்களின் ஆடியோக்களையும் தயாரிப்பாளர்கள் வெளியிடுவதற்கு முன்பே வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு தமிழ்ராக்கர்ஸில் விஷால் பார்ட்னராக இருக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விஷால், 8 மணி நேரத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், செய்தியாளர்கள் சிலர் தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் விஷால் இதற்கு எந்த பதிலும் கூறாமல் சைலண்டாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்.