தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் நடிகர் சங்க செயலாளரும்  மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலிப்பதாக பல கிசு கிசுக்கள் வெளியானது. விஷால் பல முறை லக்ஷ்மிகரமான பெண்ணை காதலிப்பதாக கூறியும் உள்ளார். 

ஆனால் திடீர என்று வரலக்ஷ்மி நான் விஷாலை காதலிக்கவில்லை என்று அறிவித்தார். பின்னர் எல்லோருக்கும் இவர் ஒரு வேலை லக்ஷ்மி மேனனை காதலிப்பார் என்று கூறிவந்தனர்.

ஆனால் நேற்று அதிரடியாக விஷால் அப்பா பிரபல நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் இவருக்கும் ஆந்திர பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆன தகவலை அறிவித்துள்ளார்.

நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. நடிகர் சங்கத்திற்கு, புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார். 

நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர். மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். 

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. விஷாலுக்கு மணமகள் முடிவானதையும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.