Asianet News TamilAsianet News Tamil

Thupparivaalan2 : ஆக்‌ஷனுக்கு ரெஸ்ட் கொடுக்கும் விஷால்.... புத்தாண்டில் புது அவதாரம் எடுக்கிறார்

'துப்பறிவாளன் 2 ' படத்தில் இருந்து மிஷ்கின் விலகி விட்டதாகவும், எனவே இந்த படத்தை தானே இயக்க உள்ளதாகவும் நடிகர் விஷால் கடந்தாண்டு அறிவித்தார்.

vishal revealed Thupparivaalan 2 shooting plan
Author
Tamil Nadu, First Published Dec 6, 2021, 6:26 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகர் விஷால் துணை இயக்குனராக  திரையுலகில் காலடி எடுத்து வைத்து பின் கதாநாயகனாக மாறியவர் விஷால். இவரின், உயரம், வெயிட், போன்றவை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கு ஏற்ற போல் உள்ளது என அவரை நடிகராகும்படி  ஊக்கு வித்தவர் நடிகர் அர்ஜுன்.

ஆரம்பத்தில் இவர் நடித்த செல்லமே, சண்டை கோழி போன்ற படங்கள் வெற்றிப்படமாக அமைந்தது. பின் பல படங்களில் வரிசையாக கமிட் ஆகி நடிக்க துவங்கினார். இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான, 'துப்பறிவாளன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 

vishal revealed Thupparivaalan 2 shooting plan

இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருந்தார். எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக் கி வந்தார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் கடந்தாண்டு நிறைவடைந்தது.,அதன்பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் ஒரு சில விஷயங்களில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 'துப்பறிவாளன் 2 ' படத்தில் இருந்து மிஷ்கின் விலகி விட்டதாகவும், எனவே இந்த படத்தை தானே இயக்க உள்ளதாகவும் நடிகர் விஷால் கடந்தாண்டு அறிவித்தார்.

vishal revealed Thupparivaalan 2 shooting plan

இதற்கு பின் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இப்படத்தை கிடப்பில் போட்ட விஷால், பிற படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளார் விஷால்.

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் லண்டனில் தொடங்க உள்ளதாகவும், 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

புத்தாண்டில் புது அவதாரம் எடுக்க உள்ள விஷால், ஆக்‌ஷனுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு டைரக்‌ஷனில் கவனம் செலுத்த உள்ளார். மேலும் 
விஷால் இயக்க உள்ள முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios