Vishal postponed his sandakozhi 2 film shooting

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து கொண்டு இருக்கும் படம் சண்டைகோழி 2. தனது சொந்த தயாரிப்பில் இந்த படத்துக்காக பல கோடி செலவில் செட் போட்டு படபிடிப்பு நடத்தி ஒண்டு இருகிறார்கள். ஆனால், தயாரிப்பு சங்க தலைவர் என்பதால் தீபாவளிக்கு விஜயின் மெர்சல் படம் ரிலீஸ்யில் எந்த பிரச்னையும் வர கூடாது என்று தன படபிடிப்பை நிறுத்திவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே பொங்கலுக்கு பைரவா படத்தை தொடர்ந்து தற்போது இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக போகும் பிரம்மாண்ட படம் தான் மெர்சல். விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் படக்குழுவும் படத்தின் டீஸர் மூலம் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளனர். அதேசமயம் அரசுடன் வரி பிரச்சனை காரணமாக சினிமா பாதிப்பு அடைந்து வருகிறது. இந்த காரணத்தால் கடந்த வாரம் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.

மெர்சல் படம் வருவதற்குள் பிரச்சனை முடிந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் மெர்சல் படத்துக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று நடிகர்சங்க தலைவர் விஷால் தன்னுடைய சண்டக்கோழி 2 பட படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இதற்காக கடுமையாக வேலை செய்திருக்கிறாராம்.