vishal plays three roles in nallai namathey film

நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலும் ரியல் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட விஷால் சிறந்த படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் மிக சிறப்பாக தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறது என்று எல்லோரின் பாரட்டுகளில் நனைந்து கொண்டே படங்களிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மிஸ்கின் இயக்கத்தில் "துப்பறிவாளன்" இதை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் "கருப்பு ராஜா வெள்ளை ராஜா" மற்றும் "இரும்புத் திரை" என்ற படத்திலும் நடித்து கொண்டு இருக்கும் விஷால் அடுத்ததாக ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இயக்குநர் பொன்ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் "நாளை நமதே" படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இதை சி.வி.குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

"துப்பறிவாளன்", "இரும்புத் திரை", "கறுப்பு ராஜா வெள்ளை ராஜா" ஆகிய படங்களுக்குப் பிறகு "நாளை நமதே" படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.

ஏற்கெனவே விஷால் 3 கதாபாத்திரங்களில் புரட்சி தலைவரின் பெயரில் நடித்த (MGR) ‘மதகஜராஜா’ வெளியாகாத நிலையில், புரட்சித்தலைவரின் மற்றொரு மெகா ஹிட் படமான ‘நாளை நமதே’ படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். கதாநாயகிகள் தேர்வு, பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.