நடிகர் விஷால் நடிப்பதை தாண்டி, நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், போன்ற பதவிகளை வகித்து வருகிறார். 

இந்நிலையில் இவருடைய திருமணம் குறித்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன், விஷாலின் தந்தை ஒரு செய்தியை வெளியிட்டார்.

அதாவது, விஷால் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் அனிஷா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறினார். ஆனால் இது குறித்து விஷால் ஒருமுறைகூட வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர், விஜய் ரெட்டியின் மகள் அனிஷா, என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளது உண்மை தான் என தெரிவித்துள்ளார்.

இது காதல் திருமணமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என கூறினார்.  மேலும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு,  பதில் அளித்த விஷால், நிச்சயதார்த்தம் இதுவரை நடைபெறவில்லை என்றும் விரைவில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள் என கூறினார்.

அதேபோல் ஏற்கனவே சொன்ன மாதிரி நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என்றும் திருமணம் பற்றிய மற்ற விவரங்களை முறைப்படி அறிவிப்பேன் என்றும் கூறினார்.

விஷால் எப்படியும் நடிகை வரலட்சுமியை தான் திருமணம் செய்து கொள்ளவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாகவே தான் உள்ளது.