நடிகர் விஷாலுக்கு படபிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது அவருடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் நடிகர் விஷாலுக்கும் நடிகை அனிஷா ரெட்டிக்கும், ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் தமன்னா இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மியும் நடிக்கிறார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக, கடந்த வாரம் விஷால் மற்றும் படக்குழுவினர் துருக்கி நாட்டிற்கு சென்றனர்.  இந்நிலையில் விஷால் வில்லனுடன் மோதும் பைக் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விஷாலுக்கு ஏற்பட்ட விபத்தில்,  எலும்பில் விரிசலும், தசை பிறகும் பிசகும் ஏற்பட்டது.

இதனால் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விஷாலை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இந்த தகவல் விஷாலின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற 'டெம்பர்' படத்தின் ரீமேக்காக  விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்கியா'  படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா, பார்த்திபன் , கேஎஸ் ரவிக்குமார் , சோனியா அகர்வால், உட்பட பலர் நடித்துள்ளனர் அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.