நடிகர் விஷாலுடன் சமந்தா முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பறிவாளன் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கும் ’இரும்புத்திரை’ படத்தில் விஷாலுடன் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை விஷாலின் சொந்த நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலம் அவரே தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது.

மிஷ்கினின் "துப்பறிவாளன்" படத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தையும் விஷாலின் சொந்த நிறுவனமே தயாரிக்கின்றது. இதில் விஷாலுடன் ராகுல் ப்ரீத் சிங், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.