Vishal is waiting for the Chief Minister to make good decisions

கேளிக்கை வரி தொடர்பாக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று காத்திருக்கிறார் விஷால்.

திரைப்பட துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், “செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை சந்தித்து பேசினோம்.

திரைப்படத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.