Vishal irumbuthirai Release Date Release Everything is RK Nagar effect ...
விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘இரும்புத்திரை’ படம் மீண்டும் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொங்கல் வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு.
இந்த நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தின் புதிய போஸ்டரை விஷால் வெளியிட்டார். அதில் ஜனவரி 26-ஆம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளது.
மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஷால் மனுத்தாக்கல் செய்ததால், ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் தான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தனர்.
