லத்தி படத்திற்கான சண்டை காட்சி படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது... இது குறித்து வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது..

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடித்த எனிமி திரைப்படம் கடந்தாண்டுதீபாவளிக்கு வெளியானது. ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி திரையிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர். பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் பிப்ரவரி 4-ம் தேதி திரைக்கண்ட இந்த படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது..

இதற்கிடையே துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தையும் விஷால் இயக்கி வந்தார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் கடந்தாண்டு நிறைவடைந்தது.,அதன்பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.Thupparivaalan 2 Update
ஆனால் ஒரு சில விஷயங்களில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 'துப்பறிவாளன் 2 ' படத்தில் இருந்து மிஷ்கின் விலகி விட்டதாகவும், எனவே இந்த படத்தை தானே இயக்க உள்ளதாகவும் நடிகர் விஷால் கடந்தாண்டு அறிவித்தார்.

இதற்கு பின் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இப்படத்தை கிடப்பில் போட்ட விஷால், பிற படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் நீண்ட நாட்களுக்கு பின் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளார் விஷால்.

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் லண்டனில் தொடங்கியது. 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் லத்தி படக்குழு சூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டுள்ளனர்..அதில் சண்டை காட்சியின் போது மேலிருந்து விழுவது போன்ற காட்சியின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது... இந்த வீடியோ ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது..

Scroll to load tweet…