Vishal in anger at Sivakarthikeyan
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவியான, தலைவர் பதவியை வகித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவருடைய அனுமதி பெறாமல் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழு செய்த செயலால் தற்போது விஷால் உச்ச கட்ட கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
எப்போதும் ஒரு திரைப்படத்தை தயாரிப்பவர்கள், முதலில் படத்தை முடித்துவிட்டு, தயாரிப்பாளர் சங்கத்திடம் கடிதம் கொடுக்க வேண்டும் பின், சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அனைவரும் பரிசீலித்த பின்பு தான் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வார்கள்.
இதற்கு மாறாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடித்து வரும் 'சீமராஜா' திரைப்படம் வரும் 19 ஆம் தேதி தான் படப்பிடிப்பே முடிகிறதாம். 
ஆனால் படக்குழுவினர், தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்து, எந்த அனுமதியும் பெறாமல், தற்போதே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். இதனால், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு மீது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
