தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாகியிருக்கும் இந்தப் படத்தில், 'மில்க் ப்யூட்டி' தமன்னா, ஐஸ்வர்யா லெட்சுமி என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். தனது வழக்கமான ஃபார்முலாக்களில் இருந்து விலகி, முதல்முறையாக பக்கா ஆக்ஷன்  ஃபார்முலாவுடன் மிகபிரம்மாண்டமாக படத்தை தந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி.

இதுவரை விஷாலின் நடிப்பில் வந்த படங்களில் இல்லாத வகையில், அளவுக்கு அதிகமான சண்டைக் காட்சிகளுடன் வந்த படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடைசி நேரத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் சோலோவாக வந்த 'ஆக்ஷன்' படம், முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.34 லட்சம் வரை வசூலை ஈட்டி அசரவைத்துள்ளது ஆக்ஷன். 

அத்துடன், உலகம் முழுவதும் ரூ.3.5 கோடி வரையில் வசூல் செய்துள்ளதாம். தமிழில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், தெலுங்கில் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சங்கத்தமிழன் படமும் ரிலீசாகி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதால், ஆக்ஷனின் வசூலுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல் நாளைவிட வரும் நாட்களில் ஆக்ஷனின் வசூல் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனையடுத்து, 'ஆக்ஷன்' படத்தின் வசூல் குறையாமல் இருக்க சூப்பர் யுக்தியை கையில் எடுத்துள்ளது படக்குழு. அது என்னவென்றால்? இந்தப் படத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் துள்ளலான இசையில், விஷாலுடன் இணைந்து அரைகுறை உடையில் தமன்னா குலுக்கல் ஆட்டம் போட்ட பாடல் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. 

ஆகையால், ஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற தமன்னாவின்  'நீ சிரிச்சாலும்...'  என்ற கவர்ச்சி பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனதுடன், ரசிகர்களின் லைக்சையும் அள்ளி வருகிறது.

 'நீ சிரிச்சாலும்..' என தமன்னா போட்டிருக்கும் கவர்ச்சி ஆட்டம், ஆக்ஷனை ரசிக்க திரையரங்குக்கு ரசிகர்களை கொண்டுவருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.