vishal help for old actress

நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பதவிகள் உயர்ந்து கொண்டே போனாலும் விஷால் தன்னுடைய அறக்கட்டளை மூலம் செய்து வரும் உதவிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில், பிரபல நடன கலைஞர் ஜமுனா என்பவர், வயதான சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டு அனாதையாக வடபழனியில் பிச்சை எடுத்து வந்தார்.

இவரை பற்றி சமீபத்தில் பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன, மேலும் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்து வரும் விஷால் தனக்கு எதாவது உதவிகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை அறிந்த விஷால், தன்னுடைய மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி கிருஷ்ணனையும் உடனே அவர்களை சந்தித்து தேவையான உதவி செய்யுமாறு அனுப்பினார். அப்போது திருமதி. ஜமுனா அவர்களிடம் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டாம். எனக்கு மாதா மாதம் உதவி தொகைவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றுவோம் என்று கூறி புது துணியும் அளித்துள்ளார்கள்​,​ மேலு​ம்​ மாதம் தோறும் 2000 ருபாய் வழங்கவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.