தயாரிப்பாளர் சங்க விவகாரம் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதன் விஷால் தனது ஆதரவாளர்களுக்கும் கூட தான் இருக்கும் இடம் பற்றிய விபரங்கள் தெரியாமல் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.

இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும். கோடிகளில் ஊழல் செய்த விஷால் பதவியில் நீடிக்கக்கூடாது’ என்ற கோஷங்களுடன் விஷாலின் எதிர் அணியினர் தி.நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்கத்தை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையை முறியடிக்க விஷால் தரப்பில் சங்கச்செயலாளர் கதிரேசன் தவிர ஒருவரும் ஆஜராகவில்லை.

சங்கத்துக்கு வந்த மீடியாவினர் காலைமுதலே அங்கு விஷால் ஆஜராவார் என்று காத்திருந்தனர். ஆனால் பிரச்சினையை எதிர்கொள்ளவிரும்பாத விஷால் தான் இருக்கும் இடம் குறித்த எந்த தகவலையும் தனது ஆதரவாளர்களுக்குக் கூடத் தெரிவிக்காமல் தலைமறைவாகவே இருக்கிறார்.