vishal give the depawali gift



நடிகர் சங்க தலைமையை நாசர் கைப்பற்றியதில் இருந்து, நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார்.

அதன் படி கடந்த ஆண்டும் நடிகர் நடிகைகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது தீபாவளி பண்டிகை வர இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வரும் நடிகர், நடிகைகளை நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேரில் சந்தித்து புத்தாடை மற்றும் இனிப்புகளை பரிசாக வழங்கினார்.