Asianet News TamilAsianet News Tamil

’இதை வெளியே சொன்னா வெட்கக்கேடு மிஸ்டர் விஷால்...’

இந்த விழாவில் பங்கேற்று நடிகர் விஷால் மருத்துவர்களை பாராட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு நடிகர் விஷால் வந்திருந்தார். அப்போது குளோபல் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவர்களை பாராட்டுவதற்கு விஷால் வந்திருப்பதாக பேசிக் கொண்டனர்.
 

vishal gets 5 lakhs to attend functions
Author
Chennai, First Published Dec 16, 2018, 11:28 AM IST

எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் தமிழக முதல்வராக ஆகியே தீருவது என்ற எண்ணத்தில் இருந்து வரும் விஷால், அதற்காக தன்னைத் தயார் படுத்தும் விதத்தில் சுவரேறிக்குதிப்பது, பொதுக்கூட்டத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுவது என்று ‘வளர்ந்துவரும்’ நிலையில் தற்போது ஒரு மருத்துவ நிகழ்ச்சிக்காக ஒரு மணி நேரத்துக்கு 5 லட்ச ரூபாய் வாங்கிய வெட்கக்கேடான செயல் வெளிவந்துள்ளது.vishal gets 5 lakhs to attend functions

சென்னை குளோபல் மருத்துவமனையில் ஆந்திராவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த சிறுமிக்கான மருத்துவ செலவை சுமார் 1914 பேர் சேர்ந்து ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து குளோபல் மருத்துவமனையில் தேர்ந்த மருத்துவர்கள் குழு 8 மணி நேரம் ஆப்பரேசன் செய்து அந்த சிறுமியை காப்பாற்றினார்.

 இந்திய அளவில் கல்லீரல் நோயை குணப்படுத்துவதில் சிறந்து விளங்கும் குளோபல் மருத்துவமனை சிறுமிக்கு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்த மருத்துவர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. அதாவது தங்கள் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு தாங்களே பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்று நடிகர் விஷால் மருத்துவர்களை பாராட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு நடிகர் விஷால் வந்திருந்தார். அப்போது குளோபல் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவர்களை பாராட்டுவதற்கு விஷால் வந்திருப்பதாக பேசிக் கொண்டனர்.

அதாவது ஒரு மணி நேரம் வந்து செல்ல ஐந்து லட்சம் ரூபாய் விஷாலுக்கு குளோபல் மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு நடிகர் விஷால் காதிலும் விழுந்துவிட்டது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர், மருத்துவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க குளோபல் மருத்துவமனையிடம் 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கியது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார்.vishal gets 5 lakhs to attend functions

 இதனால் அங்கிருந்த பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்கள் விஷாலை சூழ்ந்து கொண்டனர்.    மருத்துவமனையில் மருத்துவர்கள் புரிந்த சாதனையை பாராட்டுவதற்கு கூட பணம் வாங்க வேண்டுமா? என்று விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவே ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியதாக சமாளித்தார்.

இப்படி வசூலான 5 லட்சங்களை கஜா புயலுக்கு எப்போது வழங்குவார் என்பதுதான் இப்போதைய கேள்வி. 

Follow Us:
Download App:
  • android
  • ios