நடிகர் விஷால் தான் நடித்து வரும் படங்கள் , நடிகர் சங்க வேலைகள், சமூக சேவை என பிஸியாக இருக்கிறார். 

இவர் யார் வம்பு தும்பிற்கும் செல்லவில்லை என்றாலும் இவரை குறிவைத்து சிலர் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அதே போல் சமீபத்தில் ஜல்லிக்கட்டு தடை வந்தபோது, விஷால் பீட்டாவிற்க்கு ஆதரவாக விஷால் செயல் படுபவர் என்றும் அவர் பீட்டா அமைப்பின் உறுப்பினர் என பல தகவல்கள் வெளியாகியது .

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் விஷால்... நான் சொல்லாத சில கருத்துக்களையும் நான் சொல்லுவதாக கூறி சிலர் சதி செய்து வதந்திகளை பரப்பி வருவதாகவும்.

இனி நான் கூறவிரும்பும் கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து தான் கூறுவேன், அதில் நானாக மாட்டினால் தான் உண்டு என்னை யாரும் சிக்க வைக்க முடியாது என அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் பீட்டாவை பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்துள்ள விஷால், நான் இறச்சி உண்பவனாக இருக்கும் போது எப்படி பீட்டா அமைப்பில் இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தன்னை பற்றி வதந்திகளை பரப்புபவர்கள் உங்கள் வேலையை விட்டு விட்டு ஏன் எனக்காக நேரத்தை வீணடிக்க வேண்டும் உங்கள் வேலையை போய் பாருங்கள் எனவும் கூறியுள்ளார்.